நைட் பார்ட்டியில் அவருடன்…. இரவு 1 மணிக்கு கதவு தட்டி – ஆர்த்தியின் அட்டூழியங்கள்!

Author:
12 செப்டம்பர் 2024, 10:19 காலை
jeyam ravi aarthi
Quick Share

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரான ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்ததாக சமூக வலைதளங்களில் அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

jeyam ravi

ஆனால் இது குறித்து அவரின் மனைவி ஆர்த்தி என்னுடைய கவனத்திற்கு வராமலேயே எங்களிடம் கலந்தோசிக்காமலே ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்துவிட்டார். அவரின் இந்த செயலால் நானும் என் குழந்தைகளும் தவித்துக் கொண்டிருக்கிறோம் என அறிக்கை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது என அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவு மட்டுமே என ஆர்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டது மேலும் பேசு பொருளாகியது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என பல கோணங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது .

jeyam ravi aarthi

அந்த வகையில் ஆர்த்தி நைட் பார்ட்டிகளில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செல்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம். தொடர்ந்து இரவு நேர பார்ட்டிகளுக்கு அவர் சென்று வந்ததாகவும் இதுதான் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு இடையே விரிசல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு அதிகரித்து சண்டையாக உருவெடுத்ததாம்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இது பற்றி சினிமா விமர்சகர் அந்தகன் பேட்டியில் கூறும்போது. ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு இருந்த அதீத காதல்தான் இந்த மணமுறிவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எப்போதுமே ஜெயம் ரவி மீது அதிக அன்புடன் இருக்கும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் அவர் மீது சந்தேகப்பட துவங்கி இருக்கிறார். அவர்களின் காதல் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகமாக மாறியுள்ளது.

மேலும் அடிக்கடி ஜெயம் ரவிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய்? என்று கேட்டுக் கொண்டே தொல்லை கொடுத்து வந்ததாகவும். மேலும் திடீரென ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்புக்கு அவரிடம் சொல்லாமலேயே வருவது போன்ற விஷயங்கள் ஜெயம் ரவிக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.

jeyam ravi Divorce

மேலும் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் திடீரென அவரின் அறை கதவை தட்டி என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என சந்தேகிக்க கண்ணோடு பார்ப்பது உள்ளிட்டவை ஜெயம் ரவிக்கு பிடிக்காமல் போய்விட்டது. இது போன்ற டார்ச்சர்களுடன் தொடர்ந்து அவருடன் வாழ முடியாது என முடிவெடுத்த ஜெயம் ரவி விவாகரத்து செய்துவிட்டார். எனவே இந்த விவாகரத்து விஷயத்தில் ஆர்த்திக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை அவரின் அதீத காதல் தான் இந்த விவாகரத்தை நோக்கி சென்று விட்டதாக அந்தகன் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 272

    0

    0