தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
குஷ்பு சுந்தர் சியை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் பிரபுவை காதலித்து வந்தது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். ஆனால், அந்த காதலுக்கு சிவாஜி கணேசன் எதிர்ப்புகள் தெரிவித்ததால் பிரேக் செய்துக்கொண்டனர். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார் குஷ்பு.
பிரபு குஷ்பு இருவருமே உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். பெற்றோர்கள் சம்மதிக்காததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இதனால் சிவாஜி குடும்பத்தின் பெயர் பொதுவெளியில் மோசமாக விமர்சிக்கப்பட்டது. அந்த சமயத்தில் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனையே வெடித்ததாம்.
அதுமட்டும் இல்லாமல் குஷ்பு வேறு மதத்தை பின்பற்றுபவர் என்பதால் சிவாஜி அவரை மருமகளாக ஏற்றுக்கொள்ளவே முடியாது என கூறிவிட்டாராம். வேறு வழியே இல்லாமல் பிரபு குஷ்புவை பிரிய மனமில்லாமல் பிரிந்துவிட்டாராம். இதனால் சில வருடங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குஷ்பு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியில் வந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின்னர் சுதந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.