நிஜ கைதியிடம் சுட்ட கதை தான் இந்த கைதி படம் –மினி அட்லியான லோகேஷ் கனகராஜ் !

4 July 2021, 10:23 am
Lokesh Kanagaraj Kaithi - Updatenews360
Quick Share

மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார் விஜய். ஒன்றரை வருடங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி எப்படி உருவானது என்ற கேள்வி ரசிகர்கள் மட்டுமில்லாது திரைத்துறையினரிடையேயும் அந்த கேள்வி உலவி வந்தது.

அதன் பின்னணி என்ன என்றால், பிகில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன் தனது அடுத்த படத்துக்கான கதையை பல முன்னணி இயக்குநர்களிடம் விஜய் கேட்டுள்ளார். அப்படி அணுகிய பல இயக்குநர்களும் விஜய்யை இயக்க போகிறோம் என்ற தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் கதை கூறியுள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில் தனது first Sitting – லியே விஜய் லோகேஷை டிக் அடித்துவிட்டார்.

இந்தநிலையில் கைதி படத்தை மாஸ்டர் பட சூட்டிங் நேரத்தில் தான் பார்த்துள்ளார் விஜய். அப்போது கைதியை பற்றி மிகவும் சிலாகித்து, வியந்து, லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டினார் விஜய்.

தற்போது கைதி படம் இன்னொரு கைதியின் கதை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? . “நம்ப முடியுமே, இன்னொரு கைதியின் வாழ்க்கையை கதையாக எடுத்திருக்கிறார்கள்” என்று நீங்கள் நினைக்கும் பதில் எங்களுக்கு கேட்கிறது. ஆனால் உண்மை என்ன என்றால், சென்னை புழல் ஜெயிலில் கைதி ஒருவர் எழுதிய கதை தான் இந்த கைதி. இதை 15 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வாங்கி, அவருக்கே தெரியாமல் அதனை கைதி என்ற பெயரில் படமாக்கி 100 கோடி ரூபாய் வசூலை சம்பாதித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் ராஜீவ் என்னும் கைதி. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், அட்லி வரிசையில் லோகேஷ் கனகராஜ் இணைய போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 379

4

0