சமீப காலமாக பல திரைப்படங்களின் திரையரங்கு வெளியீட்டு தேதியையே ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்வதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு திரைப்படத்தை ஓடிடியில் விற்கவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட ஓடிடியில் அத்திரைப்படத்தை எந்த தேதியில் வெளியிடலாம் என்று Slot பிரித்து அதனை சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் முடிவு செய்த பிறகு அந்த ஓடிடி வெளியீட்டு தேதியை வைத்து அத்திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் முடிவு செய்கிறார்களாம்.
இவ்வாறு கூறப்படும் நிலையில் பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். இது சில ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இந்த நடைமுறையை கமல்ஹாசன் சற்று மாற்ற முயற்சி செய்தார். அதாவது “தக் லைஃப்” திரைப்படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தார். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால் “தக் லைஃப்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை சந்தித்தது. ரூ.300 கோடி செலவில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் வெறும் ரூ.92 கோடியையே வசூல் செய்தது. “இந்தியன் 2” திரைப்படத்தின் வசூலை விடவும் மிக குறைவாகவே வசூல் செய்துள்ளது “தக் லைஃப்”. இதன் காரணத்தால் இத்திரைப்படத்தை வருகிற ஜூலை மாதம் 4 ஆம் தேதியே ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் ஏற்கனவே போடப்பட்டிருந்த 8 வார ஒப்பந்தம் தற்போது மீறப்பட்டுள்ளதால் மல்டிபிளக்ஸ் கவுன்சிலுக்கு ரூ.25 லட்சம் அபராதம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில்…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகித்தா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…
காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…
This website uses cookies.