மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தை கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோருடன் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஒரு கேங்கஸ்டர் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக டிரெயிலரை பார்க்கும்போது தெரியவருகிறது. இந்த டிரெயிலரில் கமல்ஹாசன் அபிராமியுடனும் திரிஷாவுடனும் நெருக்கமாக இருக்கும் காட்சித் துணுக்குகள் வெளிவந்தது. எனினும் சிம்புதான் திரிஷாவுக்கு ஜோடி என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “சுகர் பேபி” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் திரிஷாவுக்காக உருவாக்கப்பட்ட பாடலாக அமைந்துள்ளது. இதில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் ஒரு நபரை காதலித்து அடைவதற்கான சந்தோஷத்தில் பாடுவது போல் அமைந்துள்ளது. மேலும் இதில் திரிஷா சினிமா படப்பிடிப்பில் பாடி நடிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அவர் “சுகர் பேபி” என்று குறிப்பிடுவது கமல்ஹாசனைத்தான் என தெரிய வருகிறது. இதன் மூலம் கமல்ஹாசனுக்கு திரிஷா, அபிராமி ஆகிய இரண்டு ஜோடிகள் இதில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. அப்படி என்றால் சிம்புவிற்கு?
“ஜிங்குச்சா” பாடலில் இடம்பெற்ற சான்யா மல்ஹோத்ரா சிம்புவுக்கு ஜோடியாக இருப்பார் என அப்பாடலின் மூலம் தெரிவந்ததாக ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர். எனினும் “சுகர் பேபி” பாடலின் வரிகளை பார்க்கும்போது திரிஷா இத்திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக வியூகிக்கப்படுகிறது.
கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்…
அமலாக்கத்துறை ரெய்டு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது Dawn Pictures என்ற நிறுவனத்தின் மூலம் தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின்…
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி டெல்லி செல்கிறார். இதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…
ஆர்த்தி-ரவி மோகன் பிரிவு ரவி மோகனும் ஆர்த்தியும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது.…
ஆபரேஷன் சிந்தூர் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை…
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமக மேடையில் டாக்டர் ராமதாஸுக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்…
This website uses cookies.