சினிமா / TV

பாக்கியலட்சுமியும் இல்லை, இது விஜய் படத்தோட காப்பி? தக் லைஃப் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

அட்டகாசமான டிரெயிலர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோருடன் திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், சான்யா மல்ஹோத்ரா, நாசர், ஜோஜு ஜார்ஜ்  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் நேற்று முன் தினம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலரை பார்க்கையில், கேங்கஸ்டராக இருக்கும் கமல்ஹாசன் சிம்புவை சிறு வயதில் இருந்தே எடுத்து வளர்க்கிறார், சிம்பு வளர்ந்தபின் கேங்க்ஸ்டராக இருக்கும் கமல்ஹாசன் தன்னுடைய பல பொறுப்புகளை சிம்புவிடம் அளிக்கிறார்,

ஆனால் சிம்புவோ கமல்ஹாசனின் இடத்திற்கு வர பல முயற்சிகளை செய்கிறார், இது இருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையாக இருக்கும் என வியூகிக்கப்படுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் விஜய்யின் மிக பிரபலமான ஒரு திரைப்படத்தின் காப்பி என இணையத்தில் பேசத் துவங்கிவிட்டனர். 

ஜில்லா

விஜய்யும் மோகன்லாலும் இணைந்து நடித்த “ஜில்லா” திரைப்படத்தை போன்ற ஒரு கதைதான் “தக் லைஃப்” திரைப்படத்தின் கதையும் என பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.  “ஜில்லா” திரைப்படத்தில் மதுரையில் கேங்கஸ்டராக இருக்கும் மோகன்லால் விஜய்யை தத்தெடுத்து வளர்ப்பார். இருவரும் உண்மையான தந்தை-மகன் போலவே பழகி வருவார்கள். ஆனால்  ஒரு  கட்டத்தில் விஜய் மோகன்லாலுக்கு எதிராகவே திரும்புவார். அதே போல்தான் “தக் லைஃப்” திரைப்படத்தின் கதையும் என்று கூறுகிறார்கள். எனினும் “தக் லைஃப்” திரைப்படம் வெளிவந்த பிறகே அத்திரைப்படத்தின் கதை எப்படி அமைந்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க முடியும். 

Arun Prasad

Recent Posts

நடிகர் சூரியின் சகோதரர் மீது பரபரப்பு புகார்… கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்டவர் கண்ணீர்!

மதுரை நரிமேடு பகுதி சோனையார் கோவில் மெயின்ரோடு பகுதியில் அலைகள் அச்சகம் என்ற கடையை நடத்தி வருபவர் முத்துச்சாமி(55). இவர்…

17 seconds ago

பேருந்து பயணிகளிடம் மட்டுமே கைவரிசை.. முதலமைச்சர் தொகுதியில் பதுங்கிய பலே கில்லாடி..!!

மயிலாடுதுறையில் ஒரு வழக்கில் தொடர்புடைய அழகிரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகராட்சி, மாரிமனுவீதியில் வீட்டில் இருப்பதை அறிந்த…

51 minutes ago

நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்- பொது மேடையில் அறிவிக்கும் விஷால்?

குறிக்கோளுக்கு அப்புறம்தான் கல்யாணம்… நடிகர் சங்க கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தி அந்த கட்டிடத்தில்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுத்திருந்தார் விஷால்.…

2 hours ago

மீண்டும் அஜித் ஓட்டிய கார் விபத்து.. டயர் வெடித்து சிதறிய போட்டோ : பதறிய ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சுயம்பாக கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசகிர்கள் படையுடன், தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும்…

4 hours ago

குளியலறையில் ரகசிய மேகரா.. மிசோரத்தில் இருந்து கண்டு ரசித்த ராணுவ வீரர் : குமரியில் டுவிஸ்ட்!

கன்னியாகுமரி ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது பெண் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள வலை…

4 hours ago

கர்மா இஸ் பூமராங்- சமந்தாவுக்கு சாபம் விட்ட பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவி? என்னவா இருக்கும்!

டேட்டிங் செய்யும் சமந்தா? “ஃபேமிலி மேன்”,  “சிட்டாடல்” போன்ற பிரபலமான வெப் சீரீஸ்களை இயக்கியவர்கள் ராஜ்-டிகே. இந்த இருவரில் ராஜ்…

4 hours ago

This website uses cookies.