‘துணிவு’ படம் ராபின் ஹுட் கதையா..? ப்ரீமியர் பார்த்த ஷாலினி செம ஹாப்பி.. கண்டிப்பா பிளாக்பஸ்டர் தானாம்..!

Author: Vignesh
9 January 2023, 10:00 am
thunivu-updatenews360 3
Quick Share

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Thunivu - Updatenews360

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

Ajithkumar_HVinoth_Updatenews360

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குஜராத்தில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம் என சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட கதை தான் என பலரும் உறுதி செய்து கூறி வந்தனர்.

இந்நிலையில், நடிகை ஷாலினி அஜித் துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்ட படத்தை பார்த்து ரசித்தார். வெளியே வரும் போது செம ஹாப்பியாக வந்த நடிகை ஷாலினியிடம் ரசிகர்கள் படத்தை பற்றி கேட்கும் போது புன்னகை புரிந்தார்.

thunivu-updatenews360 3

மேலும், ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இதனிடையே, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்தார். படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த மேனேஜர் சுரேஷ் ரசிகர்களிடம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

thunivu-updatenews360 3

பணம் தான் கதை ஏழை மக்களுக்கு கிடைக்காமல் பணக்காரர்கள் பதுக்கி வைக்கும் பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுக்கும் ராபின் ஹுட் கதை தான் அஜித்தின் துணிவு படத்தின் கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

thunivu-updatenews360 3
Views: - 511

3

1