துணிவு வெற்றி… சந்தோஷத்தில் சபரிமலையில் இயக்குநர்.. பக்தர்களோடு பக்தராக சென்ற காட்சி வைரல்!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 8:13 pm
Quick Share

துணிவு படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் சபரிமலைக்கு சென்றுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் துணிவு படத்தில் இணைந்துள்ளது. இது அஜித்தின் 61வது படமாகும். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் கடந்த 11ம் தேதி அதிகாலை 1 மணி முதலே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையில் வெளியான 3 பாடல்களும் ஹிட் அடித்தது. ஆக்சன் ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. முதல் நாளில் மட்டும் 21 கோடியே 97 லட்ச ரூபாய் வசூல் செய்தது. பொங்கல் விடுமுறையில் மேலும் பல கோடிகளை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படத்துடன் வெளியாகியிருக்கும் துணிவு திரைப்படம் வெற்றி அடைந்திருக்கும் நிலையில், அப்படத்தின் இயக்குனர் எச் வினோத் சபரிமலைக்கு சென்றுள்ளார்.

துணிவு திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்திருக்கும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் சபரிமலைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 393

3

1