சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சந்தானத்துடன் கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதற்கு முன்பு வெளிவந்த “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படத்தை போலவே இத்திரைப்படமும் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கிஸா 47” என்ற பாடலில் “ஸ்ரீனிவாசா கோவிந்தா” என்ற வரிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி இப்பாடலை நீக்கவேண்டும் என்றும் இல்லை என்றால் இத்திரைப்படம் வெளியாவதை தடை செய்ய வேண்டும் எனவும் திருப்பதியைச் சேர்ந்த ஜனசேனா கட்சியினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பானுபிரகாஷ் ரெட்டி ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “இது குறித்து சந்தானம் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடருவோம்” என பானுபிரகாஷ் ரெட்டி கூறியுள்ளார். இச்சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வளர்ந்து வரும் ஹீரோ “லவ் டூடே” திரைப்படத்தின் கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படம் வேற லெவலில் ஹிட்…
தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம்…
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள் மத்தியில் போதை தரும் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையும் படியுங்க:…
சிம்பு-ஐசரி கணேஷ் விவகாரம் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் “வெந்து தணிந்தது காடு”. சிம்பு ஐசரி…
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,…
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம்…
This website uses cookies.