சமீப காலமாக திரிஷா நடித்த எந்த திரைப்படமும் அவ்வளவாக வெற்றியடையவில்லை. மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் சரியாக போகவில்லை.
அதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் இணைந்து நடித்த “விடாமுயற்சி” படுதோல்வியை தழுவியது. மீண்டும் அஜித்துடன் இணைந்து “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் அத்திரைப்படம் அதிகளவு விமர்சிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் நடித்த “தக் லைஃப்” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக திரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக அமையவில்லை.
இவ்வாறு தான் நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் திரிஷா திடீரென ஒரு முடிவெடுத்துள்ளாராம். அதாவது அடுத்த ஆண்டு வரை எந்த புது திரைப்படங்களிலும் ஒப்பந்தம் ஆக கூடாது என முடிவெடுத்துள்ளாராம்.
சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் வெளியான பிறகு இத்திரைப்படத்தின் ரிசல்ட் என்ன என்று பார்த்துவிட்டு அதன் பின் புதிய படங்களில் ஒப்பந்தாமகலாம் என முடிவெடுத்துள்ளாராம். இச்செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.