லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே கூறலாம். அந்த வகையில், படம் வெளியான 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா நேற்று இரவு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நடிகர் விஜய்யும் வருகை தந்து குட்டி கதையை கூறுவார் எனவும் முன்னதாகவே படக்குழு பச்சை கொடி காட்டியது. அதன்படி, விஜயின் குட்டி கதைக்காக்கவும், அவர் பேசும் மற்ற சூசக பதில்களுக்காகவும் காத்திருந்தனர்.
வழக்கமாக படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஜய் குட்டி கதை கூறுவார். ஆனால், லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் இந்த லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு விஜய் குட்டிக்கதை சொல்லி அரங்கத்தை தெறிக்க விட்டார்.
லியோ வெற்றி விழாவில் த்ரிஷா பேசுகையில், நல்ல வேலை இந்த படத்தில் ஹரால்டு தாஸ் மூலமாக லோகேஷ் என்னை போட்டு தல்லவில்லை. லியோ 2 விலும் மீண்டும் விஜயுடன் நடிக்க வாய்ப்புள்ளது. இன்னமும் எனக்கு விஜய் கார பொரி வாங்கி தரவில்லை. நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பது பழைய ஸ்கூல் பிரண்டுடன் மீண்டும் கெட்டு கெதர் சென்றது போல் தான். செம ஜாலியாக இருந்தது, சத்யா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. lCUவில் நானும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி என பேசி அரங்கத்தையே கலகலப்பாகிவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.