அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகமல் இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளான நேற்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தின் ராசியான முதல் எழுத்தான “v”ல் தான் இந்த முறையும் “விடாமுயற்சி” என டைட்டில் உள்ளது. இதனால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறலாம். மேலும் இதன் டைட்டிலில் சில சீக்ரெட்ஸ் ஒளிந்திருக்கிறதை பார்க்க முடிகிறது. அதாவது, விடாமுயற்சி என்ற டைட்டிலில் “ற்” என்ற வார்த்தையில் வைக்கப்பட்ட புள்ளி தேடல் பொருளை உணர்த்துவதாக இருக்கின்றது.
எனவே இப்படத்தில் அஜித்தின் வேர்ல்ட் டூர் பயணத்தின் ஸ்வாரஸ்யங்களையும், சாகசங்களையும் டாகுமெண்ட்ரியாக எடுக்கலாம் என எதிர்பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லாமல் போஸ்டரில் சுழல் இடம் பெற்று இருப்பதால் ஒரு கப்பல் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக யாரை போடலாம் என பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பின்னர் திரிஷா தான் தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் அவர் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துவிட்டார். தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் வேறு நடித்து வருகிறார். எனவே அவர் தான் சரியாக இருக்கும் என திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். திரிஷா அஜித்திற்கு ஜோடியாக ஜி, கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.