90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார். அதற்கு காரணம், அவர் மீது அவர் மீது எழும் விமர்சனங்கள் தான். மன்சூர் அலிகான் முதல் பிரபல கட்சித் பிரமுகர் வரை திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் பெரிசாக வெடித்தது.
இதனை தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தன்னுடைய படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் திரிஷா. அஜித்தின் விடாமுயற்சி கமலின் Thug life போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் விஷ்வம் பரா என்ற படத்தில் நடித்துள்ளார். 68 வயது நடிகருடன் ரொமான்ஸா என்று சில விமர்சனங்களும் வந்தன.
இந்நிலையில், திரிஷா குறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகை திரிஷா திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களில் தனது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நடித்து வருவதை அனைவரும் அறிவோம். அந்த வகையில், தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் திரிஷா நடித்த விளம்பரம் ஒன்று தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபல நிறுவனத்தின் ஜூஸ் விளம்பரத்தில் மாதவன் கன்னத்தில் முத்தமிடுகிறேன் என தனது நண்பர்களிடம் பந்தயம் செய்யும் த்ரிஷா. ஜூஸ் பாட்டிலில் முத்தம் கொடுத்ததை மாதவனிடம் அனுப்புகிறார். அந்த ஜூஸ் பாட்டிலை தனது கன்னத்தில் மாதவன் வைக்க மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் திரிஷா. அந்த பழைய வீடியோ தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.