விஜய் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.. பளிச்சென்று பேசிய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

இதில், அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.

இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆனது. இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

மேலும், இனிவரும் நாட்களுக்கு படம் குறித்த நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் பிளான் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

முன்பே கூறியிருந்தது போல், படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். அதன் முதற்படியாக ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் நடந்துள்ளது. பிரபல டி சீரிஸ் நிறுவனம் விஜயின் 68வது படத்தின் ஆடியோவை 28 கோடி கொடுத்து வாங்கி உள்ளார்களாம். இவர்கள் இதற்கு முன்பு விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ ரைட்ஸ் 10 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்து, விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு, வந்த சமயத்தில் இருந்தே, யார் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என பேச்சு இணையதளத்தில் எழுந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சாய்பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது. ஆனால், அங்கு கிடையாது விஜய் தனது தாய் சோபாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாய்பாபா கோவிலை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சாய்பாபா கோவிலில், கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. அங்கு விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது. விஜய் கட்டியுள்ள ஸ்ரீ சாய்பாபா மந்திர் கோவிலின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காசுக்காக இந்த மலமாட கல்யாணம் பண்ண போறியா?.. வரலட்சுமிக்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..! (video)

இந்நிலையில், பல சர்ச்சையான சம்பவங்களை சந்தித்த திரிஷா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சாய்பாபா கோவிலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில், நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்படுவதால் அம்மாவிற்காக சாய்பாபா கோவில் கட்டியதால் அங்கு த்ரிஷா சென்றிருக்கிறாரோ என சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஒருவேளை அப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் த்ரிஷா காபி வித் அணு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்த வீடியோவில் விஜய் எப்படி என்று அனு த்ரிஷாவிடம் கேட்க, சொல்லலாமா என்று விஜயிடம் பர்மிஷன் கேட்டிருக்கிறார் திரிஷா, போரிங், very Moody, சில சமயம் ஜாலியாக இருப்பார். அதிக நேரம் அமைதியாகவே இருப்பார். யார்கிட்டயுமே அதிகமா பேசமாட்டார். ஒரு சேர் போட்டு செவுருக்கு முன்னாடி உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பார். சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றும், விஜய் தன் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திரிஷா அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.