உச்ச நடிகர்களை ஓரங்கட்டி கோடியில் புரளும் TTF.. காஸ்ட்லி ஹீரோவா இருக்காரேப்பா..!

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரியில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அறிமுகமாகிய படத்திற்கு லட்சத்தில் தான் சம்பளம் பெற்று வந்தனர். ஆனால், யூடியூப் மூலம் பிரபலமாகி முதல் படத்திலேயே கோடியில் சம்பளம் வாங்கி உள்ளது தமிழ் சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

15 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

16 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

16 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.