தமிழ் சினிமாவுல சில படங்களுக்கு ரெண்டு கிளைமாக்ஸ் இருக்கு. என்னடா இது ரெண்டு கிளமாக்ஸானு ஆச்சரியப்படறீங்களா.
ரசிகர்களுக்கு பிடிக்கல, தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கல, இயக்குநர்களுக்கு பிடிக்கலனு கிளைமாக்ஸ் மாத்தி எடுத்திருக்காங்க. நெகட்டிவ்வா முடியற கிளைமேக்ஸ் சீன்களை பாசிட்டிவ்வாக மாத்தி எடுத்த படங்களும் உண்டு. அப்படி எந்தெந்த படங்கள் இருக்குனு பார்க்கலாமா.
ப்ரியமுடன்
விஜய், கௌசல்யா நடித்த இப்படத்தை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. விஜய் எந்த படத்துலயும் நெகடிவ் ரோல் பண்ணதில்ல ஆனா இந்த படத்துல அத செஞ்சாரு.
படத்துக்கு முதல்ல எழுதுன கதையில விஜய் சாகர மாதிரி தான் இருக்கும், ஆனா தயாரிப்பாளரும், SAC யும் இது வேணாம் வொர்க் அவுட் ஆகாதுன்னு சொல்ல, பாஸிட்டிவ் க்ளைமேக்ஸ் ஷூட் பண்ணி வெச்சாங்க. final out பாக்கும் போது விஜய்க்கும் இயக்குனருக்கும் இது புடிக்காம போக, முதலில் எடுத்த க்ளைமேக்ஸ்ச உறுதி பண்ணி படத்துல வெச்சாங்க.
கிரீடம்
அஜித் நடித்த இந்தபடத்தில் க்ளைமேக்ஸ் காட்சிலஅவர் வில்லனைகொன்று,அவரோட போலீஸ் ஆகும்கனவும் நிறைவேறாமல்ஜெயிலுக்கு போவார்,இதை ரசிகர்கள் ஏற்று கொள்ளாததால்,இயக்குனர் அஜித்தால் கொல்லப்பட்டவர் ரவுடியாககாண்பித்து,அஜித் கோர்ட் ஆல்மன்னிக்கப்பட்டு போலீஸ் ஆகுறமாதிரி முடிச்சிருப்பார்
வசந்தமாளிகை
படம் வெளி வந்த முதல் நாள்ள, சிவாஜி கணேசன் காதல் தோல்வியால் குடித்து குடித்து இறந்து போற மாதிரி க்ளைமேக்ஸ்ல காட்டியிருப்பாங்க. அதை ரசிகர்கள் விரும்பாததால், ஏற்கனவே எடுத்த பாஸிட்டிவ் க்ளைமேக்ஸ் மீண்டும் சேர்க்கப்பட்டது.
மின்சார கனவு
ராஜீவ் மேனன் இயக்கத்தில் வந்த படம். Climax ல கஜோல் கன்னியாஸ்திரி ஆகுறத அரவிந்த் சாமி தடுத்து நிறுத்தி பிரபு தேவா வுக்கு கல்யாணம் பண்ணி வெக்கரா மாதிரி எடுத்து இருப்பாங்க.
இது பெருசா யாருக்கும் புடிக்கல, So ரெண்டாவது ஷூட் பண்ண க்ளைமேக்ஸ் ல, அர்விந்த் சாமி சர்ச்சில் Father ஆகுற மாதிரியும், கஜோல், பிரபு தேவா தன் குழந்தையோடு அரவிந்த் சாமிய மீட் பண்ற மாதிரியும் முடிச்சி இருப்பாங்க.
முகவரி
music director ஆகும் கனவுல இருக்கும் அஜித் க்ளைமேக்ஸ் ல தன் காதலயும்,music director ஆக முடியாம வேறுவேலைக்குபோற மாதிரி முடிச்சி இருப்பாங்க. இது ரசிகர்களுக்கு புடிக்கல, அதனால் ரீலீஸ் ஆன 4வது நாள்ளபுது க்ளைமேக்ஸ்மாத்தி, அஜித் காதல்லயும் கனவுலயும் ஜெயிக்கிற மாதிரி இருக்கும்
நல்லவனுக்கு நல்லவன்
இந்த படத்தில் ஒரு சோகமான எண்டிங்கா, ராதிகாவும் ரஜினியும் சாகுறா மாதிரி இருக்கும்.இது தயாரிப்பாளர் AVM சரவணனுக்கு பிடிக்கல,இதுல ரஜினிக்கு இயக்குனர் முத்து ராமனுகும் உடன்பாடு இல்லாவிட்டாலும்,அவர் கேட்டதுக்காக புது பாஸிட்டிவ் க்ளைமேக்ஸ் ஷூட் பண்ணி வெச்சாங்க.
வேட்டையாடு விளையாடு
GVM இத எடுக்கும் போதே பாஸிட்டிவ் and Negative ரெண்டு எண்டிங்கும் எடுத்தார், நெகடிவ் Ending ல ஜோதிகா இறக்குறா மாதிரி வெச்சி இருப்பாங்க, இது ஆடியன்ஸ் கு பிடிக்கல. GM ஏற்கனவே எடுத்த பாஸிட்டிவ் எண்டிங்க ல ஜோதிகா உயிரோட இருக்குரா மாதிரி முடிச்சி இருப்பாங்க.
காதலர் தினம்
கதிர் இயக்கிய இந்த படத்துல climaxல ஹீரோயின் விஷம் குடித்து இருக்குற மாதிரி எடுத்து இருப்பாங்க. இது ஆடியன்ஸ்கு புடிக்கல. அதனால் re shoot போய் காதலர்கள் ஒன்னு சேருவது போல எடுத்திருப்பாங்க.
காக்க காக்க
GVM இந்த படத்துல ஜோதிகா சாகுறாமாதிரி தான் எடுத்தார், ஆனா fans கு இது புடிக்கல, theater visit ல மாத்தாம விட்டுட்டாங்க. ஆனா படம் வந்து ஒரு வருஷத்துக்கு அப்புறம் ரீலீஸ் பண்ண DVD Version ல ஜோதிகா உயிரோட வரா மாதிரி காட்டி இருப்பாங்க.
சுப்பிரமணியபுரம்
ஜெய் இறந்த பிறகு சசிகுமார், இதுக்கெல்லாம் காரணமான ஜெய்யோட காதலியான ஹீரோயின் ஸ்வாதி ய கொல்ற மாதிரிதான் எடுத்தார், ஆனால் அது சரிவராதுங்கிற காரணங்களால் மாத்தி , சமுத்திரகனியை கொல்ற மாதிரி எடுத்து இருப்பாங்க.
விண்ணைத் தாண்டி வருவாயா
இது கொஞ்சம் வித்தியாசம், தமிழ் version ல சிம்பு(கல்யாணம் ஆகாம), திரிஷாவும் பிரிஞ்சி கல்யாணம் ஆகி தனித் தனியா வாழற மாதிரி முடிச்சி இருப்பாங்க. ஆனா இத தெலுங்கு versionல, Negative Climax புடிக்காம சமந்தா, நாக சைதன்யா ரெண்டு பேரும் சேர்ந்துகல்யாணம் ஆகி இருக்குரா மாதிரிமுடிச்சி இருப்பாங்க.
இது போன்று இன்னும் சில படங்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.