விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.
அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 கார்ட் மூலமாக பிரதிப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. நிக்சன் ஐஷுவிடம் கண்ணாடி மூலமாக முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை நிக்சன் சரி செய்த அந்த சமயத்தில் கொஞ்சம் வேஷ்டியை மேலே தூக்க உடனே ஐஷு கத்தினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் ஐஷு மற்றும் நிக்ஷன் ரொமான்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், ஐஷுவின் அம்மா ஷைஜி அவரது சமுகவலைத்தள பக்கத்தில் ஐஷு குறித்து எமோஷ்னலாக ஒரு பதிவிவை பகிர்ந்து உள்ளார். அதில், எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷு. இந்த ஐஷு எனக்கு வேண்டாம் எனவும், நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் பார்க்க விரும்புகிறோமெ என்று பகிர்ந்து இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலர் அதை முதலில் செய்ய நிக்ஷன் விடமாட்டான் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தற்போது ஐஷு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வர வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. ஒரு நாளுக்கு 20 ஆயிரம் ருபாய் ஐஷுக்கு சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். அதானால் மொத்தமாக ஐஷு ஜிஎஸ்டி பிடித்தம் போக சுமார் 8 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற இருக்கிறார்.
இந்நிலையில், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் அனைவருக்கும் புதிதாக இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை நடிகர் புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி தான். ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க இந்த புகழ், ஸ்ருஷ்டி தான் பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக வந்துள்ளார்களா என தெரியவில்லை.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.