“உதயநிதி ஸ்டாலினுக்கும் நயன்தாராவுக்கும் ஒரு Connection இருந்துச்சு” பற்ற வைத்த அரசியல் பிரபலம் !

24 November 2020, 11:25 am
Quick Share

கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது. திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மேற்கொண்டு இருக்கும் கதைக்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் சிம்புவுடன் காதல், அதன் பிறகு நடிகர், இயக்குனர், Dance Master ஆன பிரபுதேவாவுடன் காதல், தற்போது 5 வருடங்களாக விக்னேஷ் சிவனுடன் காதல் என பல காதல் சமாச்சாரங்களில் சிக்கி வருகிறார் நயன்தாரா.

இதற்கிடையில் அதிமுக சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடிக்கும் போது ஒரு கனெக்சன் இருந்ததாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே அந்த படங்களில் நடித்து வரும் போது நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று கிசுகிசு புறப்பட, தற்போது அது உண்மையென உறுதியாகி உள்ளது.

இன்னும் நயன், தன் வாழ்க்கையில் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறாரோ என்று தெரியவில்லை.

Views: - 1

0

0