அரவிந்த்சாமியின் அழகில் மயங்காத பெண்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு எவர் கிரீன் ஹீரோவாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். இவர் முன்னதாக பொழுதுபோக்கிற்காக மாடல் துறையில் நுழைந்தார். முதன்முதலாக இவர் நடித்த காபி விளம்பரத்தை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தளபதி படத்தில் பெரிய ஸ்டாராக வலம் வந்த ரஜினியின் தம்பியாக நடிக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தார்.
இதனிடையே, ஆண் அழகன் அரவிந்த் சாமி சாக்லேட் பாய் ஆக பம்பாய் படத்தின் மூலமாக அத்தனை பெண் ரசிகர்களையும் வளைத்து போட்டார். இவர் 1991ம் ஆண்டு தளபதி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரோஜா, மின்சார கனவு, அலைபாயுதே, என் சுவாசக் காற்றே, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
கதாபத்திரங்கள் தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்தும் அவர் வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
இவர் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு ருத்ரா,ஆதிரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு நடிகர் அரவிந்த்சாமி குறித்து பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். நிறைய சீரியல்களில் நடித்த நடிகரான டெல்லி குமார் தான் அரவிந்த்சாமியின் தந்தை என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அரவிந்த்சாமியின் தந்தை வி.டி.சுவாமி தான் இவர் பெரிய தொழிலதிபர் என்றும், இவருடைய மனைவி ஒரு பரதநாட்டிய கலைஞர் என்றும், இவருடைய வளர்ப்பு மகன்தான் அரவிந்தசாமி என்று கூறியுள்ளார்.
ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், செய்யாறு பாலு இது குறித்து அரவிந்த்சாமி யாரிடமும் சொன்னதும் கிடையாது அரவிந்த்சாமி பிறந்ததும் டெல்லி குமார் அவருடைய உறவினரான வி.டி.சுவாமியிடம் தத்து கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக அரவிந்த்சாமி தனது சொந்த வாழ்க்கை குறித்து யாரிடமும் வெளிப்படையாக பேசியதில்லை என்று பேட்டியில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.