திருமண வாழ்க்கையில் நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால், மனம் திறந்து பேசிய சமந்தா..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: இந்த வயசுல உனக்கு பொண்ணு கேக்குதா?.. பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் வேதனை..!

மேலும் படிக்க: உங்களுக்கு இன்னும் வயசு ஆகல… சத்யராஜை பார்த்து அசந்து போகும் இளசுகள்..!(Video)

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: திருமணத்துக்கு முன்பு விபூதி அடித்த எக்ஸ்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சன்னி லியோன்..!

சமீபத்தில், விவாகரத்து பெற்ற சில ஆண்டுகளில் சமந்தா வீட்டார் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும், அதற்காக மாப்பிள்ளையையும் பெற்றோர்கள் பார்த்துள்ளதாகவும், நடிகை சமந்தா வேறொரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!

ஆனால், சமந்தா தரப்பில் இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா புஷ்பா படத்தில் வரும் பாடலில் நடனம் ஆடக்கூடாது என குடும்பத்தினரும் தோழிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறியிருந்தார். மேலும், புஷ்பா படத்தில் நடனமாட வாய்ப்பு வந்தபோது நான் விவாகரத்து முடிவு எடுத்திருந்தேன். அந்த நேரம் என்னிடம் எனக்கு தோழிகளும் சரி குடும்பத்தினரும் சரி விவாகரத்து முடிவை அறிவிக்கப்போற நேரத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாட வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால், அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த பாடலில் நான் நடனம் ஆடினேன். அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை அனைவரும் அறிந்து தான் அந்த வாய்ப்பை நிராகரிக்க என்னிடம் எந்த காரணமும் இல்லை. எதற்காக நான் மறைக்க வேண்டும் நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் நான் 100% உண்மையாக இருந்தேன். ஆனால், அது எனக்கு ஒர்க் ஆகவில்லை என சமந்தா பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

8 minutes ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

47 minutes ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 hour ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

எங்க கூட்டணிக்கு விஜய் வந்தால் சிவப்பு கம்பளம் தயார்… பாஜக பகிரங்க அறிவிப்பு!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…

3 hours ago

எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…

3 hours ago

This website uses cookies.