தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது.
லால்சலாம் படத்தை முடித்த பின்னர் ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக தலைவர் 170 படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்களின் அறிவிப்பு ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில்,இப்படத்திலிருந்து ரஜினியின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை பார்த்திராத மிரட்டலான லுக்கில் இருக்கிறார் ரஜினிகாந்த். மேலும், இன்று முதல் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என இந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.
தலைவர் 170 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி கொடுத்த பேட்டி ஒன்றில் பெண்கள் இல்லாமல் என்னால் இரவு தூங்க முடியாது என்று சொன்னதாக ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இதனை ரஜினி ரசிகர்கள் ரஜினியை பிடிக்காத விஷக்கிருமிகள் இதுபோன்ற தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
This website uses cookies.