அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!

Author: Selvan
21 January 2025, 10:15 pm

இசைநிகழ்ச்சியை அறிவித்த இளையராஜா

சமீபத்தில் நெல்லையில் இசைஞானி இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது அடுத்து எந்தந்த ஊர்களில் நிகழ்ச்சி நடக்க உள்ளது என்ற தகவலை தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Upcoming Ilaiyaraaja concerts in Tamil Nadu

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவான் என போற்றப்படும் இளையராஜா தற்போது பல சின்ன படங்களிலும் தன்னுடைய இசை வித்தையை புகுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.மேலும் தேவயானி இயக்கிய கைக்குட்டை ராணி குறும்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.இப்படி பாரபட்சமின்றி கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் பக்காவாக பயன்படுத்தி இன்றும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்க: படப்பிடிப்பில் திடீர் விபத்து…பிரபல குணச்சித்திர நடிகர் மருத்துவமனையில் மரணம்…!

இவருடைய இசைக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம்,அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களுக்காக தற்போது பல இசை நிகழ்ச்சிகளை வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் நடத்த திட்டமிட்டு வருகிறார்.ஏற்கனவே கடந்த வருடம் கும்பகோணத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது,சென்னை மட்டுமின்றி தமிழ் நாட்டில் பல ஊர்களில் என்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நெல்லை நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த பிறகு அடுத்து சேலம் திண்டுக்கல்,தூத்துக்குடி,வேலூர்,கடலூர்,புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் உங்களை பார்க்க ஆவலோடு இருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.மேலும் விரைவில் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதனால் இளையராஜாவின் இசை மழையில் நனைய ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!