“தாய் பாசத்துல நம்மள மிஞ்சிருவான் போலையே” சிம்புவுக்கு பாசமாக சோறு ஊட்டும் உஷா ராஜேந்தர் !

22 January 2021, 1:30 pm
Quick Share

சில வருடங்களுக்கு முன், சிம்பு குண்டாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘ பத்து தல ‘ என மற்றொரு படம் என அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் நடிப்பதற்கு முன்பு சிலம்பரசன் தனது உடம்பை நன்றாக குறைத்து, நான் கடவுள் ஆர்யாவைப்போல் தாடி, மீசை, முடி என வளர்த்து செம்ம ஸ்டைலாக இருந்தபோது அவரது தாயான உஷா ராஜேந்தர் கையால் சாப்பிட்ட வீடியோ தற்போது ரீலீஸ் ஆகி வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள்,
“தாய் பாசத்துல நம்மள மிஞ்சிருவான் போலயே” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 0

0

0