வடிவேலு-ஃபகத் ஃபாசில் கூட்டணி இணைந்து நடித்த “மாமன்னன்” திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இவரது வில்லத்தனம் மிகவும் அபாரமாக இருந்தது. மேலும் காமெடி நடிகரான வடிவேலு இத்திரைப்படத்தில் சீரீயஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இதனை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம்தான் “மாரீசன்”.
இத்திரைப்படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். ஆர் பி சௌத்ரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வடிவேலுவும் ஃபகத் ஃபாசிலும் இணைந்து நடித்துள்ள “மாரீசன்” திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த டீசரின் ஆரம்பக்கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சாந்தமாக பைக்கில் பயணம் செய்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் திடீரென ஒருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக்கொள்கின்றனர். இவ்வாறு இந்த டீசர் அமைந்துள்ளது.
தற்செயலாக சந்திக்கும் இரண்டு வழிப்போக்கர்கள் முகமலர்ச்சியோடு பயணித்து வரும் நிலையில் திடீரென இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். இதுதான் இத்திரைப்படம் மையக்கருவாக இருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் டீசர் ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.