ECR பண்ணை வீடு.. பேட்டாவில் கமிஷன்.. தொடர் விமர்சனங்கள் குறித்து மௌனம் களைத்த வடிவேலு..!

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.

“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான கிசுகிசுகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார். வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் உடன் நடித்திருந்தார்.

இந்நிலையில், முன்னணி நடிகையாக திகழ்ந்த அம்பிகா மார்க்கெட் இல்லாத போது வடிவேலுவிடம் வாய்ப்புக்காக கேட்டுள்ளார். அந்த சமயத்தில், அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டதால் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல், கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்னை வீட்டிற்கு கூட்டிச் செல்வாராம். மேலும், சினிமா விமர்சகர் வித்தகன் வடிவேலு பற்றி கூறுகையில் ப்ரியா பவானி சங்கர், ஸ்ரேயா சரண், ஷிவானி போன்ற நடிகைகளும் இந்த லிஸ்டில் இருப்பதாகவும் கூறி பதற வைத்திருக்கிறார்.

இப்படியாக நடிகர் வடிவேலு குறித்து பல விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அதாவது, ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் வடிவேலு பெண்களிடம் தவறாக நடந்து கொள்வார் என்றெல்லாம் கூறப்பட்டது. பெண்கள் விஷயத்தில், மிகவும் மோசமானவர் வடிவேலு என்றெல்லாம் செய்திகள் வெளியானது. உதவி செய்யும் மனம் இல்லாதவர் என்று அவரை பற்றி சக நடிகர்கள் பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வடிவேலு தன்மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், அவர் திரைத்துறையில் நல்லதை விட கெட்டது தான் அதிகம் உள்ளது. கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணி வெடியா இருக்குன்னு ஒரு வசனம் பேசி இருப்பேன். அதேபோலத்தான் என்னுடைய வாழ்க்கையும் எது செய்தாலும் எனக்கு இப்படித்தான் பெயர் வருகிறது. இது பற்றி கமல்ஹாசனிடம் கேட்டேன். இந்த மாதிரி எல்லாம் நிறைய வருவார்கள் என்று சொன்னார். நான் ரீ என்ட்ரி கொடுத்தவுடன் என்னை விமர்சனம் செய்தவர்கள் காணவில்லை. செய்யும் தொழிழை உயிராக நேசித்தால் எங்கும் எப்போதும் தோற்கமாட்டோம் கீழே விழமாட்டோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Poorni

Recent Posts

எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!

அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…

25 minutes ago

ஒரு பிச்சைக்காரனால அரசாங்கமே ரிஸ்க்ல இருக்கு- தனுஷின் “குபேரா” படத்தின் கதை இதுதானா?

வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…

58 minutes ago

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

This website uses cookies.