தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.
`என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தனுஷின் படிக்காதவன் படத்தில் விவேக்கிற்கு முன்னதாக வடிவேலு தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தாராம். அப்போது ஒரு காட்சியில் தனுஷை பார்த்து வடிவேலு டயலாக் பேசவேண்டும். ஆனால் வடிவேலு ஷாட் ரெடி என்றதும் தனுஷை பார்க்காமல் திரும்பிக்கொண்டாராம். இதை இயக்குனர் எடுத்து சொல்லியும் 6, 7 டேக் வரை அப்படியே செய்துள்ளார் வடிவேலு. இதனால் கடுப்பான லைட்மேன் லைட்டை மாற்றி பொருத்தினராம். இதனால் காலதாமதம் ஆகியுள்ளது.
அப்போது படத்தின் இயக்குனர் சூரஜ், ” அண்ணனுக்கு (வடிவேலு) நிமிஷத்துக்கு காசு போது என்னையா இப்போ போய் லைட்ட மாத்துறீங்க” என மனதில் உள்ளதை அப்படியே கேட்டுவிட்டாராம். இதனால் கடுப்பான வடிவேலு அங்கிருந்து கிளம்பினாராம். பின்னர் தனுஷ் அவரை சமாதானம் செய்து ஒழுங்கா நடிங்க அண்ணே… இந்த காட்சியில் நான் சொல்லி கொடுக்குற மாதிரி பண்ணுங்க சீக்கிறோமா முடிஞ்சிடும் என எடுத்து சொன்னாராம்.
இதனை அந்த இடத்தில் சைலண்டா கேட்டுக்கொண்ட வடிவேலு பின்னர் அங்கிருந்தவர்களிடம், ” சந்திரமுகி படத்தில் இவன் மாமனுக்கே நான் தான் நடிப்பு சொல்லிக்கொடுத்தேன்…. இவரு எனக்கு சொல்லிக்கொடுப்பாராம் என ஆணவத்தில் பேசினாராம். மேலும் தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்ததால் அவரை நீக்கிவிட்டு அந்த படத்தில் பின்னர் நடிகர் விவேக்கை போட்டார்களாம் படக்குழு.இந்த சம்பவத்தை மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.