உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.
உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாளில் வசூல் செய்த இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
லியோ படத்தை பார்த்த பலரும் விமர்சன ரீதியாக தாக்கி பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் த்ரிஷாவுடன் முத்தக்காட்சி இருப்பது குறித்து பேசி இருக்கிறார். அந்த இடத்திற்கு லிப் லாக் என்பது தேவை. அந்த லிப் லாக் ஆபாசம், உணர்ச்சியை தூண்டுவது போல் இல்லாமல் இக்கட்டான நேரத்தில் கொடுப்பதுதான். அந்த விஷயத்தில் ஓகே தான் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், படத்தில் விஜய் ஹைனாவுடன் சண்டை போட்டு ரத்தக்கரையுடன் இருப்பார். பின்னர் சட்டையை மாற்றி விட்டு வீட்டிற்கு வரும்போது த்ரிஷா சட்டை ஏன் வீணாக்கிவிட்டாய் என்று கேட்டு சண்டை போடுவார். கணவன் ஹைனாவுடன் சண்டை போட்டு வரும்போது இப்படி எந்த மனைவியாக கேட்பாளா? பதற மாட்டாளா? அந்த இடத்தில் கூட கணவன் மனைவி எப்படி பேசுவாங்கன்னு தெரியாம அந்த காட்சியை வச்சிருக்காங்களே என்று விமர்சித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.