Twitter Trending-ல் மாஸ்டர் படத்துக்கு Head Master வலிமை என நிரூபித்த தல! Twitter-ஏ சொல்லிட்டாங்க..!
Author: kavin kumar23 August 2021, 2:40 pm
H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரேயொரு ஆக்ஷன் காட்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது. தற்போது Russia-விற்கு விரைந்து செல்கிறது படக்குழு. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், வெளியான வலிமை படத்தின் வேற மாதிரி பாடலுக்கு விமர்சனம் வந்தாலும் தியேட்டரில் அதகளம் உறுதி. வருஷாவருஷம் எந்த படத்தின் Hashtag-கள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அதிகம் பகிரபட்டது என்று Twitter தனது அதிகாரபூர்வமான கணக்கில் வெளியிடுவார்கள். அந்த வகையில், இந்த முறை எந்த படம் முந்திக் கொள்ளும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அதவாது அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி..
வலிமையா? மாஸ்டரா? என்ற போட்டிக்கு தற்போது ட்விட்டர் நிறுவனமே விடை அளித்திருக்கிறது. அதாவது இந்த அரையாண்டின் முடிவில், எந்தெந்த ஹேஷ்டேகுகளின் கீழ் அதிக ட்வீட்கள் பகிரப்பட்டன என்ற டாப் 10 லிஸ்டை ட்விட்டர் நிறுவனமே வெளியிட்டிருக்கிறது. அதில் மாஸ்டர் Hastag-களை முந்திக்யுள்ளது தலயின் வலிமை. மேலும், டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த Hastag-கள் எது என்றால், 1. #valimai 2. #master 3. #sarkaruvaaripaata 4. #ajithkumar 5. #thalapathy65 6. #iheartawards 7. #rubiadilaik 8. #bts 9. #covid19 10. #vakeelsaab
2
0