நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதனிடையே ப்ளூ சட்டை மாறன் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கொடுத்தார்.மேலும், அஜித்தை உருவ கேலியும் செய்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. இணையத்தில் அவரை தாக்கி பதிவிட்டு வருகின்றனர். சில பிரபலங்களும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு வந்த எதிர்விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்டுவிட் செய்து வருகின்றார். ‘பால் பாக்கெட்களை மட்டுமல்ல. குடிநீர் கேனையும் திருடி சாலையில் கொட்டி அராஜகம் செய்யும் கூட்டம். இவர்களை கண்டிக்க வக்கில்லாத சுண்டைக்காய் செலப்ரிட்டிகள்’ பதிவி செய்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.