சுதந்திர தினத்துக்கு தனியா கெத்தா வரும் வலிமை? தல ஃபர்த்டே டிரீட் இல்லையா?

20 January 2021, 1:16 pm
Quick Share

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிக்கிறார். மேலும், கார்த்திகேயா கும்மகோண்டா, பவல் நவகீதன், யோகி பாபு, குக் வித் கோமாளி ஃபேம் புகழ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.


சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி அல்லது ராஜஸ்தானில் வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்க இயக்குநர் ஹெச் வினோத் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவிற்கு வலிமை படக்குழுவினர் செல்ல இருக்கின்றனர். அங்கு மீதமுள்ள அனைத்து காட்சிகளையும் படமாக்குவதோடு வலிமை படத்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளையும் அங்கேயே எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். வரும் பிப்ரவரிக்குள் வலிமை படத்தை முடித்துவிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
வலிமை படப்பிடிப்பு முடிந்த பிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், வலிமை படம் ரிலீஸ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 ஆம் தேதி அஜித்தின் சென்டிமெண்ட் நாளான வியாழக்கிழமையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதோடு, #Thala50FestIn100D என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆம், வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருப்பதால், #Thala50FestIn100D என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தற்போது தல அஜித் பைக் ரைடில் சிக்கிம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். வாரணாசியில் ஒரு உணவகத்தில் அஜித் சாப்பிட்ட போது எடுத்த புகைப்படம் தான் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

சென்னையிலிருந்து சிக்கிம் சென்று வருவதற்கு 4500 கிமீ தொலைவு ஆகும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தல அஜித் தனது பைக்கிலேயே சிக்கிம் சென்றுள்ளார். சிக்கிம் சென்று பின்னர் ஓரிரு நாட்களுக்குப் பிறகு அஜித், சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0