வலிமை படத்துக்காக ZEE5 நிறுவனம் செய்த காரியம்… தூக்கி வைத்து கொண்டாடும் AK ரசிகர்கள்…!!!

Author: Babu Lakshmanan
22 March 2022, 7:38 pm
Quick Share

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான வலிமை, கடந்த மாதம் 24ம் தேதி வெளியாகியது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு, திரையரங்கில் வெளியான மிகப்பெரிய படம் வலிமையாகும்.

உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு முதல் நாளிலிருந்தே அமோக வரவேற்பு கிடைத்தது. சுமார் 200 கோடியைக் கடந்து வசூலை குவித்து வருகிறது வலிமை. இப்படியிருக்கையில், வலிமை திரைப்படம் வரும் 25ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

ajith - valimai - updatenews360

இதனை விளம்பரப்படுத்தும் விதமாக ZEE5 நிறுவனம் பிரமாண்ட யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது, சுமார் 10 ஆயிரம் சதுர அடிக்கு வலிமைப் படத்தின் போஸ்டரை செய்து மலைக்கச் செய்துள்ளது.

இதனை 72 மணி நேரத்தில் 500 தன்னார்வலர்களின் உதவியுடன் செய்து முடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வலிமை கொண்டாட்டத்தில் இருந்து வெளியே வராத அஜித்தின் ரசிகர்களுக்கு இது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, ZEE5 நிறுவனத்தை AK ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Views: - 761

0

0