ஆலுமா டோலுமா/அடிச்சுதூக்கு பாடல் வரிகளுடன் வரும் வலிமை பெப்பி டான்ஸ் சாங்!
24 January 2021, 5:37 pmஅஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் ஆலுமா டோலுமா அல்லது அடிச்சுதூக்கு ஆகிய பாடல்களின் வரிகள் கொண்ட பெப்பியான பாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் 2ஆவது முறையாக இணைந்துள்ள தல அஜித் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், கார்த்திகேய கும்மகோண்டா, பவல் நவகீதன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து மொராக்கோவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இங்கு மீதமுள்ள அனைத்து காட்சிகளையும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் பிப்ரவரி மாதத்திற்குள்ளாக அனைத்து காட்சிகளையும் முடித்துவிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அஜித்தின் சென்டிமெண்ட் நாளான வியாழக்கிழமையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அஜித் நடித்த வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் வரும் இரு பாடல்களின் மூலமாக வலிமை படத்தில் பெப்பி டான்ஸ் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேதாளம் படத்தில் இடம்பெற்ற பட்டி தொட்டியெங்கும் மாஸ் காட்டிய பாடல் தான் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல். இந்தப் பாடலைக் கேட்டு ஆடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பாடல். இதே போன்று தான் விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சுதூக்கு பாடல். இந்தப் பாடலும் பட்டி தொட்டியெங்கும் பரவி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், ஆலுமா டோலுமா மற்றும் அடிச்சுதூக்கு ஆகிய இரு பாடல்களின் தொகுப்பாக வலிமை படத்தில் பெப்பி டான்ஸ் சாங் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலை சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0