பீட்டர் பாலுடன் மீண்டும் சேருவாரா வனிதா விஜயகுமார் ? முடியலடா டேய் !

5 November 2020, 2:09 pm
Quick Share

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு சில வாரங்களுக்கு முன் அவர்கள் பிரிந்துவிட்டார்கள், வனிதா பீட்டரை அடித்து துரத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவ, உடனே வனிதா அதை ஒற்றுகொண்டார்.

இந்தநிலையில், அவர் மீண்டும் பீட்டர் பாலோடு சென்ற போவதாக செய்திகள் பரவ, அதிர்ந்து போன வனிதா உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் நல விரும்பிகள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்கப் பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இது போன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.

இதற்கு முன் நான் என் உறவுகளைச் சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன், பல அபத்தங்களைப் பொறுத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுக்க முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவிலிருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது. அதனால், தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள். இனி நேர்மறைச் சிந்தனையுடன் என் பயணம் தொடரும். உங்கள் ஆசீர்வாதத்துடன் அது என்னைச் சிறந்த இடங்களுக்கு இட்டுச் செல்லும்” என்று கூறி இருக்கிறார்.

Views: - 22

0

0