வனிதா மீது கொலை வெறி தாக்குதல்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம் : பின்னணியில் பிக்பாஸ் பிரதீப்?
நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான நடிகை வனிதா விஜயகுமார், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வனிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக அவர் கலந்துகொண்டார்.
அந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. இதனால் பாதிலேயே வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றார். அப்படியும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகும் திருமணம் உள்ளிட்ட சர்ச்சைகள் காரணமாக தொடர்ந்து லைம் லைட்டில் இருந்தார் வனிதா. பின்னர் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிடுவது, திரைப்படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியானார்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் 7 வது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அதில் தனது மகளுக்கு ஆதரவாக அவர் பேசி வருகிறார்.
அதேபோல் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கிவிட்டதாக வனிதா விஜயகுமார் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
முகத்தில் காயமடைந்து மருந்து தேய்த்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள வனிதா இதுகுறித்து தெரிவித்து உள்ளதாவது, “பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். யாரென்று கடவுளுக்கே தெரியும். பிக்பாஸ் 7 வது சீசன் விமர்சனத்தை முடித்து இரவு சாப்பிட்டுவிட்டு, எனது சகோதரி சவுமியா வீட்டில் நிறுத்தி இருந்த என்னுடைய காரை எடுக்க சென்றேன். அப்போது இருட்டில் ஒருவர் என் முன் தோன்றி, “ரெட் கார்ட் கொடுக்குறீங்களா? அதுக்கு நீ ஆதரவா” என்று கூறி தாக்கி சென்றுவிட்டார்.
எனது முகத்தில் ரத்தம் வழிந்தோடியது. கடுமையான வலியாக உள்ளது. முகம் வீக்கமடைந்து இருக்கிறது. நள்ளிரவு 1 மணி என்பதால் யாரும் அங்கு இல்லை. என்னுடைய சகோதரியை நான் அழைத்தேன். அவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க என்னை அழைத்தார்.
ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டேன். முதலுதவி பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். தாக்கியது யார் என்று தெரியவில்லை. என் காதுகளை துளைக்கும் அளவுக்கு பைத்தியம்போல் சிரித்தான்.
அனைத்தில் இருந்து ப்ரேக் எடுக்க விரும்புகிறேன். உடல் ரீதியாக திரையில் தோன்றும் வகையில் நான் இல்லை. இடையூறு செய்பவர்களை ஆதரிப்பவர்களுக்கு, ஆபத்து ஒரு அடி தூரத்தில்தான் உள்ளது. என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 என்பது தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ மட்டுமே. எனக்கு இதை கடந்து செல்வதற்கு தகுதி இல்லை.” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.