பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.
இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.
இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.
இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அவ்வப்போது மனைவியுடன் கொஞ்சல் , ரொமான்ஸ் , வானத்தில் ப்ரொபோஸ் என சமூகவலைதளவாசிகளை செம கடுப்பேற்றி வந்த பப்லு தற்போது இரண்டாம் மனைவியையும் பிரிந்துவிட்டாராம்.
ஆம், ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார். இதையடுத்து பப்லுவை பிரிந்துவிட்டார் போல என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்த அதற்கு லைக்ஸ் போட்டு பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார் கப் கேக் ஷீத்தல். இதையடுத்து நெட்டிசன்ஸ் பலரும் இந்த ஜோடியை ட்ரோல் செய்தனர்.
பப்லு தன் மகனை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஷீத்தலை திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் நம்பிக்கை இழந்த ஷீத்தல் சுயநலமாக இருக்கும் உன்னுடன் வாழவே பிடிக்கவில்லை என கூறி அவருடன் சண்டையிட்டு பப்லுவை பிரிந்துவிட்டதாகவும் பப்லுவின் வயது ஷீத்தலுக்கு மிகப்பெரிய சங்கட்டமாக இருந்ததாகவும் வெளிவரும் செய்திகள் கூறுகிறது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பப்லு, நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று ஷீத்தல் சொன்னாரா? அல்லது நான் சொன்னேனா? நீங்களா நாங்க பிரிந்துவிட்டோம் என்று கதை கட்டுறீங்க… நீங்களா நாங்க சேர்ந்துவிட்டோம் என்று சொல்றீங்க… ” என்னுடைய அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைக்க நான் விரும்பவில்லை” அதாவது, நான் அழுக்கு ஜட்டி என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட மோசமான விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. வாழ்ந்தால் வாழ்த்துவதற்கு 10 பேர் இருப்பாங்க அதே போல் விமர்சிப்பதற்கு 10 பேர் இருப்பாங்க என்று பப்லு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள வனிதா, பப்லு ஒரு தந்தையாக தனது கடமையை செய்தார். அதாவது, அவர் சோர்வாக இருந்தபோது வயது வித்தியாசத்தை தாண்டி அவருக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. எனவே வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நான் கூட நாளைக்கு பப்லு மாதிரி பண்ணலாம் ( வயது குறைந்த நபருடன் திருமணம்) அது அவங்களோடு பர்சனல் அடுத்தவர்கள் தலையிடுவது அவசியமற்றது என்று வனிதா கூறியுள்ளார். இதை வைத்து பார்த்தால் அவர் இன்னொரு திருமணத்திற்கு தயாரானதை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறாரோ என விமர்சித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.