“எல்லாத்துக்கும் காரணம் வனிதாதான்” நெஞ்சுவலி குறித்து பீட்டர் பால் வெளியிட்ட வீடியோ !

27 August 2020, 11:45 am
Peter Paul - Updatenews360
Quick Share

எல்லா பிரச்சினைகளும் ஓரளவு ஓய்ந்த நிலையில், வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலுடன் வனிதா தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன், இவரின் கணவரான பீட்டர் பாலுக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்து விட்டது அதனால் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். அதனால் வனிதாவும் அவரின் இரு மகள்களும் கவலையில் இருந்தார்கள்.

தற்போது பீட்டர் பால் மருத்துவமனையில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி மக்களுக்கும், வனிதாவுக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில், “எனக்கு ரெண்டு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்டுச்சு, அப்போ என்னை அம்மா மாதிரி பார்த்துகொண்டது வனிதாதான். அவர் இல்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று தெரியாது. அவர்தான் என்னை இதிலிருந்து மீட்டார். இத்தனை நாள் அவரை நான் மிஸ் செய்துவிட்டேன், நான் இன்று பூரணமாக இருக்கிறேன் என்றால் அதற்கு வனிதா மட்டுமே காரணம்”. என்று கூறியுள்ளார்.