விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.
அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை வனிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் மறைந்த தனது அம்மா மஞ்சுளாவை குறித்து உருக்கமாக பேசியிருந்தார். மேலும் தனது இரு மகள்களும் மற்றும் மகன் ஸ்ரீஹரி நிச்சயமாக சினிமாவுக்கு தான் வருவார்கள் என்றும், தான் காதலை பிரித்து விடுவேன் என்று பலர் நினைப்பதாகவும், ஆனால் அப்படி எல்லாம் இல்லை எனவும், தான் இதுவரை 12 பேருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், ஒருமுறை காதலர் தினத்திற்கு ஐ லவ் யூ என்று எழுதி கிரீட்டிங் கார்டு அம்மாவுக்கு கொடுத்ததாகவும், அது தனது அம்மாவுக்காக வாங்கவில்லை எனவும், அம்மாவிடம் மாட்டிக் கொண்டதால் அதை அவருக்கு கொடுத்து விட்டதாகவும், தான் வேறு ஒருவருக்காக வாங்கியது என்றும், பொய் சொல்லி தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன் அம்மா மஞ்சுளா தன்னையும் தன் தங்கை பிரித்தவையும் தான் அடித்து வளர்த்ததாகவும், இரண்டாவது தங்கை ஸ்ரீதேவியை எப்பொழுதும் அடித்ததில்லை என்றும், சின்ன வயதிலிருந்து ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுவார். கோபத்தில் ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு கையில் கிடைத்ததை உடைத்து விடுவாள். என்னமோ சிறு வயதிலிருந்து ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்ல டிராமா போட்டு எல்லாத்தையும் உடைத்து விடுவாள் அவளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்று வனிதா தன் தங்கை ஸ்ரீதேவி பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.