“வனிதாவுக்கு இயல்பிலேயே அந்த நோய் இருக்குது..” – போட்டு உடைத்த நடிகை கஸ்தூரி..!

5 August 2020, 12:00 pm
Quick Share

வனிதா பீட்டர் பால் பஞ்சாயத்தில், கஸ்தூரி பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஒரு புதிய யூட்யூப் சேனல் ஆரம்பித்து வனிதாவுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறார். இதை கண்டு காண்டான வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியை தரக்குறைவாக பேசி பதிவிட்டு வருகிறார்.

இதனால பலரும் கஸ்தூரிக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் இன்ஸ்டாவில் ஒருவர், ஏன் வனிதா கூட மட்டும் லைவ்
வரமாட்டேங்கறீங்க, என பயமா? என்று கேட்டுள்ளார்
அப்போது அதற்கு, “நான் அவரை கூப்பிட்டேன். அவர் என்னுடன் Live வர மறுத்துட்டார்”. என்று கூறியுள்ளார்.

வனிதாவின் YouTube சேனலுக்கு Subscribe பண்ணியிருக்கீங்களா?” அப்புறம் அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா? என்று ஒருவர் கேட்டதற்கு, “அதில் இருக்கிற கமென்ட்களை பார்ப்பேன்” என்று
பதில் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், வனிதா திடீரென்று, கலக்கப்போவது யாரு, நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியுடன் இரவு நேரத்தில் சரக்கு அடிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் வனிதா.
அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிறகு, நாஞ்சில் விஜயன் அவர்கள், வனிதாவிற்கு போன் செய்து, மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டன.

அதற்கு நாஞ்சில் விஜயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்க்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டாள் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள் …
Am not asking apologize to u” என்று பதிவிட்டிருந்தார்.

இதனை நடிகை கஸ்தூரி ரீடிவிட் செய்திருந்தார். மேலும் நாஞ்சில் விஜயனின் டிவிட்டுக்கு பதில் கூறிய கஸ்தூரி, தன்னுடைய அனுபவத்தில் வனிதா மேடம் சொன்னதில் பொய் தான் அதிகம் என்றும் அது அவருக்கு பொய் சொல்லும் நோய் என்றும் கூறியுள்ளார்.

Views: - 5

0

0