“வனிதாவை கூப்பிட்டேன், அவர்தான் என்னுடன் பேச வரவில்லை” வனிதாவை வெச்சு செய்யும் கஸ்தூரி…!

2 August 2020, 2:42 pm
Quick Share

வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தனக்கு நீதி கேட்டு போலீசில் புகார் அளித்தும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்தும் வருகிறார். அவருக்கு சூர்யா தேவி, ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவாக இருந்து வருகின்றனர்.

தற்போது கஸ்தூரி எலிசபெத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஒரு புதிய யூட்யூப் சேனல் ஆரம்பித்து வனிதாவுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வருகிறார். இதை கண்டு காண்டான வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியை தரக்குறைவாக பேசி பதிவிட்டு வருகிறார்.

இதனால பலரும் கஸ்தூரிக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் இன்ஸ்டாவில் ஒருவர், ஏன் வனிதா கூட மட்டும் லைவ்
வரமாட்டேங்கறீங்க, என பயமா? என்று கேட்டுள்ளார்.


அப்போது அதற்கு, “நான் அவரை கூப்பிட்டேன். அவர் என்னுடன் Live வர மறுத்துட்டார்”. என்று கூறியுள்ளார். வனிதாவின் YouTube சேனலுக்கு Subscribe பண்ணியிருக்கீங்களா?” அப்புறம் அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா? என்று ஒருவர் கேட்டதற்கு, “அதில் இருக்கிற கமென்ட்களை பார்ப்பேன்” என்று
பதில் கூறியிருக்கிறார்.

Views: - 18

0

0