வனிதாவின் கணவரான பீட்டர் பாலுக்கு திடீரென்று நெஞ்சுவலி ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

25 August 2020, 2:45 pm
Vanitha Peter 1 -Updatenews360
Quick Share

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை கொத்தாக வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார். பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர். தற்போது மூன்றாவது கணவரான பீட்டர் பாலுடன் வனிதா தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இவரின் மூன்றாவது திருமணத்தைக் குறித்து என்னென்ன நடந்தது என்று உலக மக்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போதைய விஷயம் என்னவென்றால் இவரின் கணவரான பீட்டர் பாலுக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்து விட்டது அதனால் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்த நாள் வனிதாவும் அவரின் இரு மகள்களும் கவலையில் உள்ளனர்.