பீட்டர் பாலை அழித்த வனிதா – நயன்தாராவை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் ஆச்சரியம்

16 January 2021, 10:10 pm
Vanitha Peterpaul - Updatenews360
Quick Share

லாக்டவுன் காலத்தில் ஊரே என்டர்டைன்மென்ட் இல்லாமல் இருந்தபோது, நெட்டிசன்களுக்கு concept கிடைக்காமல் தவித்த போது மொத்த பேக்கேஜாக வந்து இறங்கினார் வனிதா. விஜயகுமார் மகளில் ஒருவராகிய வனிதா சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். ஓரளவுக்கு தெரிந்த அவரது பெயரை தமிழ்நாடெங்கும் பரப்பியது பிக் பாஸ். அதன்பின் அவர் என்ன செய்தாலும் செய்தி ஆகியது. ஒரு சமையல் சேனலை யூடியூபில் நடத்திவந்த வனிதாவிற்கு லாக்டவுன் காலத்தில் டெக்னிக்கல் ரீதியாக உதவியவர் பீட்டர் பால்.

இவர்களின் நட்பு வளர்ந்து காதலாக மாறியது. அதன் பின் சில நாட்களிலேயே வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது அவருக்கு மூன்றாவது திருமணம் என்றாலும் அவரது மகள்களின் விருப்பத்தின் பேரிலேயே இந்த கல்யாணம் நடைபெற்றது. கொரோனா காலகட்டம் காரணமாக வீட்டிலேயே எளிய முறையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. இதில் பீட்டர் பீர்பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார் என்ற விஷயம் விஸ்வரூபம் ஆனது . இந்த சம்பவங்களை சில முன்னணி வலைதள பக்கங்கள் முழுமூச்சாய் கவர் செய்தன. ஆனால் இதற்கும் அசராமல் இருவரும் ஊர் சுற்றுவது தனது யூடியூப் பக்கத்திற்கு ஒன்றாக இருப்பது போல வீடியோ எடுப்பது, லிப் லாக் செய்து கொள்வது, அதை புகைப்படம் எடுப்பது என தனது விருப்பத்தின்படி வாழ்ந்தார். அதோடு நில்லாமல் பீட்டர் பால் வனிதாவின் பெயரையும் வனிதா பீட்டர் பாலின் பெயரையும் டாட்டூ குத்திக் கொண்டார்கள்.

சில காலம் மட்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்த இவர்கள் அதன் பின் கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இந்த பஞ்சாயத்தையும் விடாது கவர் செய்து கொண்டிருந்தன யூடியூப் சேனல்கள். தான் குத்தியிருந்த பீட்டர் பாலின் பெயரில் உள்ள டாட்டூவை தற்போது நீக்கி அதிரடி காட்டி உள்ளார் வனிதா. அதை வேறு சிம்பிளாக மாற்றிய வனிதா அதற்கு ஒரு அர்த்தம் இருப்பதாகவும், அது ‘டபுள் ஹேப்பினஸ்’ என்பது என்றும் தனது யூடியூபில் பதிவிட்டுள்ளார். இந்த செயல் நயன்தாராவை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Views: - 0

0

0