வனிதாவுடன் டேட்டிங் போன பிரபல நடிகரின் தற்போதைய நிலை : நட்சத்திர ஹோட்டலில் அவரு பண்ண வேலையை பாருங்க..!

Author: Vignesh
5 October 2022, 6:45 pm
vanitha - updatenedws360
Quick Share

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. வழக்கமாக 16 பேருடன் தொடங்கும் பிக்பாஸ் இந்த முறை இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் தொடங்க இருப்பதாக தெரிகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் பெரிய செல்வாக்கு இருந்து வருகிறது.

அது தொடர்களாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோக்களாக இருந்தாலும் சரி. மக்கள் விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் மிகப்பெரிய வெற்றி அடைந்த ஒரு ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக்பாஸ். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை ஒரு வீட்டில் 100 நாட்கள் அடைத்து வைத்து அவர்கள் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள வைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் பொருள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நட்பு, காதல், அழுகை, கோபம், கவலை, சிரிப்பு விளையாட்டு என அனைத்து கன்டெண்டுகளும் கிடைக்கும் இடமாக இருக்கிறது. இதனால் தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றியில் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அடுத்த நூறு நாட்களுக்கு கண்டன்டுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கப் போவது விஜய் டிவி தான்.

சீசன் ஒன்று இரண்டு மூன்று ஆகிய மூன்றும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சீசன் 4 மற்றும் 5 அவ்வளவு ஆக வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் கொரோனா தான். கொரோனா பரவல் இருந்த காரணத்தினால் போட்டியாளர்களை சரியாக தேர்வு செய்ய முடியாமல் போனது. எனவே விஜய் டிவியின் பிரபலங்களை மட்டுமே அதிகபட்சம் வைத்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தியது பிக்பாஸ்.

இதனால் சீசன் 4 மற்றும் 5 மிகப்பெரிய தோல்வி அடைந்தது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி தளத்தில் நடந்த நிகழ்ச்சியும் தோல்வி அடைந்தது. எனவே இந்த முறை போட்டியாளர்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறது பிக்பாஸ் குழு. அதன்படி பல சர்ச்சையான போட்டியாளர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் தொடங்க 4 நாட்களே இருக்கும் நிலையில் சில நாட்களாகவே போட்டியாளர்கள் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் குறிப்பாக வனிதாவின் முன்னாள் காதலர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

ஹோட்டலில் இருந்து அவர் இன்று ஒரு ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதன் மூலமாக அவர் பிக்பாஸில் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

Views: - 224

0

1