ஒரு வழியா தளபதி விஜயை பார்த்த KKR Bowler வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம் !

17 November 2020, 6:54 pm
Quick Share

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஆடி வருகிறார். Spinner ஆன வருண், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்து கவனம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இது போல் தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக தன்னால் முடிந்ததை சிறப்பாக செய்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட சில கொல்கத்தா அணி வீரர்களின் புகைப்படத்தை கொல்கத்தா அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் வருணின் இடது கையில் நடிகர் விஜய்யின் ‘தலைவா’ படத்தின் டாட்டூ ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தினை தற்போது விஜய்யின் ரசிகர்கள் அதிகம் Share செய்து வந்தனர்.

இது சம்பந்தமாக ஒரு பேட்டியில், வருண் சக்ரவர்த்தி தான் ஒரு மிகப்பெரிய விஜய் ரசிகர், அவரின் அனைத்து படங்களையும் முதல் நாளே, முதல் காட்சியே பார்த்து விடுவேன், அவரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும்” என்று கூறி இருந்தார். அவர் எண்ணம் போல் இன்று விஜயை பார்த்து தனது லட்சியத்தை நிறைவேற்றி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல்.