விஷாலின் “வீரமே வாகை சூடும்” குடியரசு தின விழாவில் வெளியாகும் என அறிவிப்பு.. !

Author: Mari
16 January 2022, 11:53 am
Quick Share

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.
இதனால் பெரிய ஹீரோக்கள் படங்கள் வெளியாவது தள்ளிப்போனது. இதனை சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகின. இதனால் திரையரங்குற்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.


இதனிடையே, ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடித்துள்ள இரண்டு கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக விழாவில் நடிகர் விஷால் பேசினார். இந்த நிலையில்”வீரமே வாகை சூடும்”, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 340

0

0