“கருப்பா இருக்கிறவங்க கட்டிபுடிச்சா தப்பா ?” சனம் ஷெட்டியை விபரீதமாக கட்டிப்பிடித்ததற்காக வேல்முருகன் ஆவேசம் !

10 November 2020, 12:15 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பகுதியில் கோப்பைக்குள் பந்தை போட்டால் Nomination-இல் இருந்து தப்பித்து விடலாம் என Big Boss அறிவிக்க, அந்தத் டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் உள்ள இருவரையும் வரும் வாரம் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது என பிக்பாஸ் அறிவித்தார்.

இந்தநிலையில், வேல்முருகன் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து Evict ஆன நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சனம் ஷெட்டியை Ball Task முடிந்த பிறகு வேல்முருகன் கட்டிப்பிடித்தது பற்றிய கேள்வி வேல்முருகன் இடம் கேட்கப்பட்டது .

“அந்தப் பந்து டாஸ்க்கில் நானும் சனமும் ஜெயிக்க மாட்டோம் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் நாங்கள் அந்த டாஸ்க்கில் வெற்றிபெற்றோம். அந்த மகிழ்ச்சியில் தான் நான் அவரைக் கட்டிப்பிடித்தேன். மற்றபடி தவறான எண்ணம் எதுவும் கிடையாது. அந்த டாஸ்க்கிற்கு முன்னரும் சரி, அதற்கு பின்னரும் சரி நான் யாரையும் கட்டி பிடித்ததே இல்லை, இதைவிட மோசமாக அந்த வீட்டில் பல விஷயம் அங்க நடந்து இருக்கு. ஆனா அதை பற்றியெல்லாம் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். கருப்பா இருக்குறவங்க என்ன செஞ்சாலும் தப்பா?” வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 20

0

0