தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வரும் முன்னணி நடிகரான விஜய் சமீபத்தில் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது .
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி தற்போது வரை உலகம் முழுக்க கிட்டத்தட்ட ரூ.325 கோடிக்கு மேல் வசூலிட்டி சாதனை படைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்: அந்த காட்சியில் நடிக்க கூச்சப்பட்ட நடிகர்… கேரவனில் கூப்பிட்டு போய் பஜனை செய்த நடிகை!
மேலும் விஜய்யின் ரசிகர்கள் சிலர் கோட் திரைப்படம் கிட்டதட்ட ரூ. 1000 கோடியை வசூல் ஈட்டவேண்டும் என கோவிலில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இப்படியான நேரத்தில் கோட் திரைப்படத்திற்காக வெங்கட பிரபு வாங்கிய சம்பள விபரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் எல்லோரையும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதாவது இந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ரூ200 கோடி வரை சம்பளமாக வாங்கினார் விஜய். ஆனால், அந்த படத்தை இயக்கிய இயக்குனரான வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து வெறும் ரூ. 10 கோடி தான் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதை கேட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி ஆகிவிட்டனர். என்னதான் இருந்தாலும் இவ்வளவு கம்மியா…? இயக்குநர்களும் பாவம் அவர்களுக்கும் சம்பளத்தை கொஞ்சம் உயர்த்துங்கள் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு சென்னை 28 மூன்றாம் பாகம் அல்லது சிவகார்த்திகேயன் கூட்டணியில் அடுத்த படத்தை ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது.
0
0