வர்மா படத்தின் விமர்சனம் ! என்ன பாலா மாமா இதெல்லாம்?

Author: Poorni
6 October 2020, 11:20 am
Quick Share

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவை,E4 எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கிரீசயா இயக்கியிருந்தார். ரதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான இப்படம் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தை கொண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் ஆதித்யா வர்மா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.

இந்நிலையில் இதற்கு முன் பாலா எடுத்த வர்மா படம் இன்று , Simply South என்னும் OTTஇல் ரிலீஸாகி உள்ளது.

சரி விமர்சனத்துக்கு வருவோம், கதையைப் பற்றி நாங்கள் சொல்ல தேவையில்லை. ஏற்கனவே ஆதித்ய வர், அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் வர்மா படத்தில் பாலா சேர்த்திருக்கும் சில காட்சிகள் அதிர்ச்சி ஆக்கியுள்ளது. குறிப்பாக ஒரு பெண்ணை பார்த்து, துருவ், “தொட்டு கும்பிடு” என்று சொல்லும் காட்சி.

நடிப்பு :

துருவ் விக்ரம், நடிகை மேகா சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். துருவ் விக்ரம், ஈஸ்வரி ராவ் நடிப்பு மட்டும் யதர்த்தமாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

இசை :

அர்ஜுன் ரெட்டி படத்தின் இசையமைப்பாளரா இவர் ? சுமார் ரகம்.

ஒளிப்பதிவு :

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இயக்கம் :

அர்ஜுன் ரெட்டி படத்தை தனகேற்றார் போல் மாற்றி அதை படமாக்கியுள்ளார் இயக்குனர் பாலா. இது பாலா ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா ஓஹோ ரகம். ஆனால் ஆனால் அர்ஜுன் ரெட்டி ரசிகர்கள், இதை தவிர்த்துவிடுவது பெட்டர்.

Plus Points :

துருவ் விக்ரமின் எதார்த்தமான நடிப்பு.

இரண்டாம் பாதியில் வரும் சில எமோஷன் காட்சிகள்.

தம்ப்ஸ் டவுன் :

மேலே இருக்கும் + Points-ஐ தவிர எல்லாம்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, வர்மா படத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஆதித்யா வர்மா படத்தை இயக்கியது ஓரளவு சரி என்றே தோன்றுகிறது.

Views: - 125

0

0