விசித்ரா முன்பு போல் , பழைய மாதிரி மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லையாம். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி, போலீஸ் அல்லது தொழிலதிபர் போன்ற வேடங்களில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.
1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு வியாபாரத்தில் பிஸி ஆனதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம். 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை தொடங்கிய அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராசாத்தி சீரியலில் நடித்து இருந்தார்.
இதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரீ கொடுத்தார். அதனை தொடர்ந்து, பிக் பாஸ் போட்டியில் களமிறங்கி சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட நூறு நாட்கள் வரை வீட்டிற்குள் இருந்து உள்ளார். தற்போது, கடந்த வாரம் மக்களிடமிருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேற விசித்ரா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில், முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிரதீப் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கும் போது கூட விசித்ரா அவருக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் பிரதீப் கதவை திறந்து வைத்துக் கொண்டுதான் டாய்லெட் போகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கப்பட்டது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விசித்ரா இது தொடர்பாக பேசியுள்ளார். ஸ்மால் பாஸ் வீட்டு பாத் ரூமில் தாழ்ப்பாள் இருக்காது அது உண்மைதான். நானும், தாழ்ப்பாள் போடும்படி பலமுறை பிக் பாஸ் இடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை. நான் தாழ்ப்பாள் போடாமல் தான் குளிப்பேன் குளிக்கப் போவதற்கு முன்பு எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான் குளிக்கப் போவேன். மேலும், இரவு நேரத்தில் அவர்கள் தான் பேசிக் கொண்டிருப்பார்கள். பிரதீப் சீக்கிரம் தூங்கி விடுவான். ஆனால், நைட் எல்லாம் தூங்காமல் இருக்கான் எங்களையும் முறைச்சு பார்த்துட்டு இருக்கான் என்று கூறுவதால் அபாண்டமான பொய் என்று விசித்ரா பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.