ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்- பிக்பாஸ் முடிந்து வீடு திரும்பிய ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோ

18 January 2021, 11:00 pm
Ramyapandian - updatenews360
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது போல் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் 100 நாட்கள் மக்கள் பிக்பாஸ் கதையையே பேசிக் கொண்டிருந்தார்கள். தற்போது நடந்து முடிந்திருக்கும் பிக் பாஸ் சீசன் 4 இல் ஆரி வெற்றி பெற்று இருந்தாலும் இறுதியில் போட்டியாளர்களாக ரியோ, பாலாஜி, சோம் சேகர், மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ரம்யா பாண்டியனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அவரை விஷப்பாம்பு என்றெல்லாம் பேசி வந்தார்கள் சிலர். காரணம் அவர் பாலாஜிக்கு அதிகம் சப்போர்ட் செய்ததுதான்.

நேற்று பிக்பாஸ் முடிந்திருந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் ரம்யா பாண்டியன். அவர் வீட்டை அடையும்போது அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை வீடியோவாக பகிர்ந்துள்ள ரம்யா பாண்டியன், அது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சிறப்பான வரவேற்புடன் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார். பெரும்பாலும் சிரித்த முகமாக இருக்கும் ரம்யா பாண்டியன் முதல் முதலில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்தார். மொட்டை மாடி போட்டோ ஷூட் மட்டுமே தற்போது பெரும் அடையாளமாக இருக்கும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையும் என நம்பிக்கையில் இருக்கிறார்.

Views: - 2

0

0