நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி கடந்த வருடம் திருமணம் செய்தனர். அதற்கு முன்னவே அவர்கள் பதிவு திருமணம் செய்தது இரட்டைக் குழந்தை விவகாரத்தில் வெளியானது.
அவர்களின் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்விலும் ஈடுபட்டு வந்தார் விக்கி. அதன்படி, வில்லனாக அரவிந்த சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படி படு ஜோராக நடைபெற்று வந்த ஏகே 62 பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்தப்பட்டு, அப்படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர். அவருக்கு பதில் மகிழ் திருமேனி தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தயார் செய்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் பிடிக்க வில்லை. இதன் காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு தகவலும் பரவி வருகிறது.
ஏகே 62ல் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அஜித்துடன் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார்.
ஆனால் லைகா நிறுவனம், திரிஷாவை நடிக்க வைக்க சொல்லியுள்ளனர். நோ சொன்ன விக்கிக்கு, ஐஸ்வர்யா ராய், காஜல் என கைக்காட்ட ஒத்துக்கொள்ளாத விக்கி, கடைசியில் பாலிவுட் நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்யும் நேரத்தில் அவரையும் வேண்டாம் என சொல்லிவிட்டார்.
இதனால் விக்கியின் பிடிவாதத்தால் கடுப்பான லைகா மற்றும் அஜித் தரப்பு, விக்கியை நீக்கியுள்ளனர். இந்த முடிவுக்கு நயன்தாராவின் பிடிவாதம் தான் காரணம் என விக்னேஷ் சிவன் புலம்பி வருகின்றனார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தின் AK 62 படத்திற்கு போட்டியாக ஒரு படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
மேலும், விஜய்சேதுபதி தானாக வந்து நான் கால்ஷீட் தருகிறேன் என்று கூறியிருக்கிறாராம். இந்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்தால் இப்படம் 3வது படமாக அமையும். எந்தக் கதையை அஜித் பிடிக்கவில்லை என்று சொன்னாரோ அந்த கதையில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.
இதில் லவ் டுடே இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிக்கயிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், முதன் முதலில் அக்கதை அஜித்துக்கு முன்னாடியே விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனிடம் கதையை கூறியிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக சிவகார்த்திகேயனும் முடியாது என்று சொல்ல, அதன் பிறகே அஜித்திடம் இந்த கதை சென்றுள்ளது. இப்போது அஜித்தும் வேண்டாம் என்று நிராகரிக்க, கடைசியாக விஜய்சேதுபதியிடம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.